Ads Area

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதன் முறையாக ஒமிக்ரோன் (Omicron) திரிபுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

சம்மாந்துறை அன்சார்.

ஐக்கிய அரபு அமீரகமானது கொரோனாவில் மாறுபாடுடைய புதிய வைரஸான ஓமைக்ரான் வைரஸின் முதல் பாதிப்பை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

அமீரகத்திற்கு வந்த ஒரு ஆப்பிரிக்கப் பெண் பயணியிடம் இந்த தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

அவர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய நெறிமுறையின்படி, கொரோனாவிற்கான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த பெண் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதுடன் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதே வேளை சவுதி அரேபியாவிலும் ஒமிக்ரோன் (Omicron) திரிபுடன் ஒருவர் இனங் காணப்பட்டு தற்போது அவரும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்....அண்மையில் ஆபிரிக்கா நாடு ஒன்றுக்கு சென்று வந்த சவுதி குடிமகன் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe