Ads Area

சம்மாந்துறையில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் "சுரகிமு கங்கா" வேலைத்திட்டத்தின் அங்குரார்பன நிகழ்வு.

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் ஜனாதிபதியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும்"சுரக்கிமு கங்கா " வேலைத்திட்டம் "நிலைபேறான சூழலியல் முகாமைத்துவம்" எனும் கருப்பொருளின் கீழ்நாடுபூராகவும் உள்ள 103 ஆறுகளின் ஆற்றுப் படுக்கையை பாதுகாக்கும் இவ்வேலைத் திட்டத்தில் அம்பாரைமாவட்டத்தில் உள்ள கல்லோயா ஆற்றினை பாதுகாக்கும் நோக்குடன் இவ்வேலைத்திட்டம்ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு சம்மாந்துறை சுருப்போடை சந்தி வளத்தாப்பிட்டி 2 கிராமசேவையாளர் பிரிவில்  புதன் கிழமை (2) சம்மாந்துறை   பிரதேச செயலாளர் எஸ்.எல்.ஹனிபா  தலைமையில்ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் எம்.  சிவகுமார் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை உதவிப் பணிப்பாளர்எஸ்.உதயராஜன்,  சம்மாந்துறை  பிரதேச சபை தவிசாளர்  ஏ.எம் நெளசாட், சம்மாந்துறை உதவி பிரதேசசெயலாளர் யு.எம் அஸ்லம் ஆகியோருடன் விஷேட அதிதிகளாக சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர்எம்.எஸ்.எம். நவாஸ், ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். 

மேலும் சம்மாந்துறை பிரதேச செயலக  அபிவிருத்தி ஒருங்கினைப்பாளர் எம்.ஏ அஸ்ரப் , சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்ஏ.கே பாத்திமா சாமிலா ,ஏ.ஆர் சாஜிதா  உட்பட மத்திய சுற்றால் அதிகார சபை உத்தியோகத்தர்கள், நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள்,  விவசாய அமைப்பின் பிரதிநிதிகள்,பொலிஸ்உத்தியோகத்தகர்கள் ,ஆற்று மண் அகழ்வு சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

சூழலியல் முகாமைத்துவத்தை மேம்படுத்தி இயற்கை வழங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வேலைத்திட்டமானது மத்திய சுற்றாடல் அதிகார சபையினால்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக ஆறு மற்றும் ஆற்றுப் படுக்கைகளைப் பாதுகாப்பதற்கான வேலைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக ஆற்றுப் படுக்கைகளில் மண் அகழ்வு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் ஆற்றுப் படுக்கை ஓரங்களில் மரங்களை நடுவதன் ஊடாக ஆற்று வளங்களையும் மண்அரிப்பையும் பாதுகாக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe