கே.எல்.எம்.முஸம்மில்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அம்பாறை, உகண, தமண, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 500 பயணாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று அம்பாறை டி.எஸ். சேனநாயக்க கல்லுாரியின் ஞான பிரதீபா மண்டபத்தில் இடம் பெற்றது.
அம்பாறை மாவட்ட காணி ஆணையாளர் ஏ.எல்.ஐ. பானு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கெரளவ காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, அம்பாறை மாவட்ட வனவிலங்கு ராஜாங்க அமைச்சர் விமலவீர தினாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசிங்க, திலக் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந் நிகழ்வில், காணி ஆணையாளர் நாயகம் கீர்த்தி கமகே, உதவிக் காணி ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், காணித் திணைக்கள ஊழியர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.