Ads Area

யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் திருவிழா.

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் திருவிழா கலாநிதி சிதம்பரம் மோகன் தலைமையில் யாழ். நெல்லை ஆதினா மண்டபத்தில் (14) வெகு சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மேஜர் ஜெனரல் செனரத் யாபா விசேட அதிதியாகவும் சர்வமதத் தலைவர்கள் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான வண.பிதா கலாநிதி எஸ்.சந்ரு பெர்னாண்டோ ஆசி உரை வழங்கினார்.

வடமாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாணம் இந்தியன் துணை தூதரகத்தின் பதில் தூதுவர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe