கொரோனா பாசிடிவாக வந்தால் அவர்களின் மாதிரிகள் மேலதிக சோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்பில் இருந்தவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் 7 நாட்கள் கட்டாயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகளை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
கொரோனா பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஒமைக்ரான் பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய தகவலின் அடிப்படையில் ஜனவரி 31-ம்தேதி வரை, சர்வதேச விமான சேவை இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.