Ads Area

அம்பாறையில் காலநிலை மாற்றத்தின் காரணமாக அன்னப்பறவைகள் சஞ்சாரம்.

 பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக அன்னப்பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இப்பறவைகள் மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள நீர்நிலைகளை நாடி   வருகை தருகின்றன.

இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த இப்பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு, அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வங்காட்டி வருகின்றனர். 

இம்மாதக்கடைசியில் இப்பகுதிகளில் பல நாட்டுப்பறவைகளும் வந்து தங்குகின்றன. இங்கு டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டுப் பறவைகள் ஜனவரி, பெப்ரவரி மாதம் கூடு கட்டத்துவங்கும். 

மேற்குறித்த பறவைகள் 3,000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், நைஜரியா, சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன. 

மேலும், இப்பகுதியில் நாரை இனங்கள்     உள்ளிட்ட வலசை பறவையினங்கள்  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe