Ads Area

தேசிய தொழில் தகைமை (NVQ) கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு உபவேந்தரினால் சான்றிதழ்கள்.

ஏ.சி. றியாஸ்.

தேசிய தொழில் தகைமை (NVQ) கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களினால் சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு. 

உபவேந்தர் எண்ணக் கருவில் உருவான பல்கலைக்கழகங்களுக்கும் சமூக கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பினை இணைத்தலின் (06ம் கட்டமாக) 

இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் கீழ் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிற்சி நிலையத்தில் 2018 ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை தேசிய தொழில் தகைமை - (National Vocational Qualification - NVQ) கணினி கற்கைநெறிகளை பூர்த்தி செய்த இளைஞர், யூவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு 30.12.2021 (வியாழக்கிழமை) தேசிய பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எம்.ஜ.எம். கரூன் தலைமையில் பல்கலைக்கழக கேட்போர் ௯டத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண பணிப்பாளர் எம். பீ. சந்திரபால், மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர்,  பயிற்சி நிலைய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் உரையாற்றிய   உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தற்காலத்தில் கல்வி கொள்கைகள் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் எனவும் கணினி (ICT) ஆங்கில துறையை விருத்தி செய்வதற்காக ஜனாதிபதி கல்வி செயலணி தபிக்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும் ஆங்கிலம், கணினி கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான விடயங்களும் பேசப்பட்டது. 

இந்நிகழ்வில் சாய்ந்தமருது தேசிய இளைஞர்சேவை நிலையத்தில் 2018-2021 வரையிலான காலப்பகுதியில் தேசிய தொழில் தகைமை - (National Vocational Qualification - NVQ) கணினி கற்கைநெறிகளை பூர்த்தி செய்த 157 இளைஞர், யூவதிகளுக்கான சான்றிதழ்களை உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe