Ads Area

அம்பாறை பள்ளக்காடு கிராமத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட மேலும் இரண்டு யானைகள் உயிரிழப்பு.

 ( அஸ்ஹர் இப்றாஹிம் )

அம்பாறை ,தீகவாபி பள்ளக்காடு கிராமத்தில் உள்ள குப்பை மேட்டிலுள்ள  பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட மேலும் இரண்டு யானைகள் கடந்த வார இறுதியில் இறந்துள்ளதாக  அமபாறை மாவட்ட வனவிலங்கு கால்நடை மருத்துவர் டொக்டர் நிஹால் புஷ்ப குமார தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளில் 20 யானைகள் குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்களை  சாப்பிட்டு இறந்துள்ளதுடன் ,. கிழக்கு மாகாணத்தில்  திறந்தவெளி குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் , பொலிதீன்  கழிவுகள் தேங்குவதாலும் அப்பகுதியில் அதிகளவில் யானைகள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறந்த யானைகளை  பரிசோதித்த போது, குப்பை மேட்டில் இருந்து பெருமளவிலான அழியாத பிளாஸ்டிக் பொருட்களை  விழுங்கியுள்ளதாகவும்  யானைகள் சாப்பிட்டு ஜீரணிக்கும் சாதாரண உணவு எதுவும் அங்கு தெளிவாகத் தெரியவில்லை எனவும் வனவிலங்கு கால்நடை மருத்துவர் டொக்டர் நிஹால் புஷ்ப குமார மேலும் தெரிவித்தார். 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe