Ads Area

சாய்ந்தமருதில் நகைகளை திருடி 85 வயது மூதாட்டியும் படுகொலை - பொலிஸார் விசாரணை !

 நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேசத்தில் அதிகாலையில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் கொலைச்சம்பவமொன்று இன்று (27) காலை பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, இலக்கம் 287, புதுப்பள்ளி வீதி, சாய்ந்தமருது-15 இல் தனியாக வசித்துவரும் சுலைமான் செய்யது புஹாரி எனப்படும் 85 வயதை உடைய ஒரு பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

ஆறு ஆண் பிள்ளைகளின் தாயாரான இந்த பெண்மணி குறித்த வீட்டில் நேற்றிரவு தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டுக்குள் நுழைந்த கொலைகாரன் அந்த பெண்ணை தாக்கி கொலைசெய்துவிட்டு அவரிடமிருந்த நகைகளை திருடிச்சென்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரது நான்காவது மகன் வழமைபோன்று காலை உணவை வழங்க தாயாரை நோக்கி வந்தபோதே இந்த சம்பவத்தை அறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe