திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கு விசாரணை இடம் பெற்றமைக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு சாட்சியிடமிருந்து சாட்சியத்தை எடுக்க ஜூம் (Zoom) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்றம் அதன் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கி உள்ளதாகவும், மேலும், ஜூம் மூலம் குறுக்கு விசாரணை நடத்த நீதிமன்றம் தேதியையும் நிர்ணயித்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
"டிஜிட்டல் மயமாக்களின் விளைவுகள் எமது நாட்டின் அனைத்து மூலைகளிலும் பலனளிப்பதைக் காண்பது ஊக்கமளிக்கிறது" எனவும் அமைச்சர் சப்ரி கூறியுள்ளார்.