பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை அபகரித்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட நபரே இந்த மோசடியை தொடர்ந்து பதவிநீக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் பிரதமர் எதிர்கட்சி தலைவராக விளங்கிய காலப்பகுதியிலேயே அவரின் செயலாளராக செயற்பட்டார் – அரச வங்கியில் உள்ள பிரதமரின் வங்கிக்கணக்கிற்கான ஏடிஎம் கார்ட் அவரிடம் வழங்கப்பட்டிருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த ஏடிஎம்கார்ட்டினை பயன்படுத்தி பிரதமரின் வங்கிக்கணக்கில் அவர் மோசடி செய்துள்ளார்.
தினக்குரல்.