(காரைதீவு நிருபர் )
நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) வருடாந்த தைப்பொங்கல் தினவிழா இம்முறை மூவினமாணவர்கள், மூன்றுமத ஆசிரியர்களின் பங்கேற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் சீ.பாலசிங்கனின் தலைமையில் மேற்படிவிழா பாடசாலை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் சிறப்பாகநடைபெற்றது.
பிரதிஅதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரனின் வழிகாட்டலில், உதவிஅதிபர் ந.கோடீஸ்வரன் நெறிப்படுத்தலில் பொங்கல்விழா சிறப்பாக நடைபெற்றது.
பிரதமஅதிதியாக சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார். அவர் பொங்கலின் வரலாறு மகிமை பற்றி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, பொங்கல் இடம்பெற்று சமயஆராதனை இடம்பெற்றது. அத்துடன் கலாசர பாரம்பரியத்திற்கமைவாக ஏனைய பட்சணங்களும் தயார்படுத்தப்பட்டிருந்தன.
விழாவில் பங்கேற்ற இஸ்லாமிய கிறிஸ்தவ ஆசிரியர்கள் மற்றும் மூவின மாணவர்களும் பாரம்பரிய பொங்கலை உணவை விரும்பி பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகவிருந்தது.
உதவி அதிபர்களான என்.வன்னியசிங்கம் ,திருமதி சு.ருபன், வெ.மகேஸ்வரன் ,கி.ஜெகதீசன் திருமதி மே.அருள்நாயகம், உள்ளிட்ட ஆசிரியர்கள் ,கலந்துசிறப்பித்தனர்.