தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் தங்களது எஜமானர்களை (sponsors’) விட்டு ஓடிப்போன வீட்டுப் பணிப்பெண்களை பயன்படுத்தி விபச்சார விடுதியொன்றை நடாத்திய வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தானியர் ஒருவர் ரியாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபச்சார விடுதியோடு சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து அட்டர்னி ஜெனரல் ஷேக் சவுத் அல்-முவாஜாப் (Attorney General Sheikh Saud Al-Muajab) பிறப்பித்த உத்தரவின் பேரில் குறித்த கும்பல் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரியாத்தில் உள்ள தங்கள் ஸ்பான்சர்களின் வீடுகளை விட்டு ஓடிப்போன பல வீட்டுப் பணிப்பெண்களை பாலியல் சுரண்டலுக்காக குறித்த பாகிஸ்தானியர் பயண்படுத்தி வந்துள்ளார்.
சவுதி அரேபிய ஆட்கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த பாக்கிஸ்தானியருக்கு அதிகபட்ச தண்டனையான 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 1 மில்லியன் சவுதி ரியால் வரையான அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த கடுமையான தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa