Ads Area

பயணத் தடை காரணமாக சவுதிக்குல் நுழைய முடியாமல் தவிப்பவர்களின் இகாமாக்கள் மற்றும் எக்ஸிட் ரீ-என்ட்ரி விசாக்களின் காலம் நீடிப்பு.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

பயணத்தடைகள் காரணமாக சவுதிக்கு வெளியில் உள்ள குடியிருப்பாளர்களின் இகாமாக்கள் மற்றும் எக்ஸிட் ரீ-என்ட்ரி விசாக்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்குமாறு சவுதி அரேபிய மன்னரும் இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலருமான சல்மான் சவூதி அரேபியாவில் உள்ள கடவுச்சீட்டுகளின் பொது இயக்குநரகத்திற்கு (ஜவாசாத்) உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் சவுதிக்கு வெளியில் உள்ள குடியிருப்பாளர்களின் இகாமாக்கள் மற்றும் எக்ஸிட் ரீ-என்ட்ரி விசாக்களின் செல்லுபடியாகும் காலம் 31 மார்ச் 2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe