தகவல் - சம்மாந்துறை அன்சார்.
கத்தார்-சவுதி-ஐக்கிய அரபு இராஜ்ஜியம்-குவைத் போன்ற வளைகுடா நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து இலங்கை வருவோர் 72 மணித்தியாலத்திற்கு முதல் பீ.சி.ஆர் பரிசோதனை ரிப்போட் எடுத்திருக்க வேண்டும் என்றும், அது ஆங்கிலத்தில் அமைப்பெறுதல் வேண்டும் எனவும் இலங்கை விமான நிலையம் மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் கீழ் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து தங்களது சுகாதார நிலையினை (health declaration) சமர்ப்பிக்க வேண்டியதும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது...இந் நடைமுறையானது 2022 ஜனவரி 01ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
12 வயதிற்கு கீழ்ப்பட்டோருக்கு பீ.சி.ஆர் அவசியமில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
விண்ணப்பப் படிவம் - https://airport.lk/health_declaration