தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் கடந்த ஒரு வாரத்திற்குல் குடியுரிமை மற்றும் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 14,227 பேர் சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகள் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021 டிசம்பர் 23 முதல் 29 வரையிலான காலகட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் பல்வேறு பிரிவுகள் மற்றும் பாஸ்போர்ட் பொது இயக்குனரகம் (ஜவாசாத்) நடத்திய சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 7,301 குடியுரிமைச் சட்டங்களை மீறியவர்கள், சுமார் 5,300 எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் 1,626 க்கும் மேற்பட்ட தொழிலாளர் சட்டத்தை மீறுபவர்களும் அடங்குவர்.
சவுதி அரேபியாவின் எல்லையை கடக்க முயன்றவர்களில் மொத்தம் 120 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 51 சதவீதம் பேர் ஏமன் நாட்டவர்கள், 45 சதவீதம் பேர் எத்தியோப்பியர்கள், 4 சதவீதம் பேர் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் , அத்தோடு சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு அடைக்களம் கொடுத்து, வாகனங்களில் ஏற்றிச் சென்ற 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் 84,026 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் 9,387 பெண்கள் உட்பட மொத்தம் 93,413 க்கும் அதிகமான சட்டவிரோத குடியிருப்பாளர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய ஒருவருக்கு போக்குவரத்து அல்லது தங்குமிடம் அல்லது ஏதேனும் உதவி அல்லது சேவையை வழங்குவோர் பிடிபட்டால் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் 1 மில்லியன் அபராதமும் விதிக்கப்படும் என சவுதி பொலிஸ் எச்சரித்துள்ளது.
ஆங்கில செய்தி மூலம் https://saudigazette.com.sa