Ads Area

சவுதியில் சலுான் கடைகளுக்கு எச்சரிக்கை - ஒருமுறை பயன்படுத்தும் ஷேவிங் கருவிகளை மீண்டும் பயண்படுத்தினால் 2000 ரியால் அபராதம்.

சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் சலுான் கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் ஷேவிங் கருவிகளை மீண்டும் பயன்படுத்தினால் கடை  உரிமையாளருக்கு SR2000 அபராதம் விதிக்கப்படும் என சவுதி அரேபிய மாநகராச்சி தெரிவித்துள்ளது. 

2022 ஜனவரி 15 ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைமுறைக்கு வரும் இச் சட்டமானது சவுதியில் உள்ள ஆண்கள், குழந்தைகள் என அனைத்து முடிதிருத்தும் நிலையங்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தை மீண்டும் மீண்டும் மீறும் பட்சத்தில், ஒரு வாரத்திற்கு கடை மூடப்படுவதுடன், அபராதம் இரட்டிப்பாக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் முடி திருத்தும் சலுான் கடைகளில் தொற்று நோய்களில் இருந்து தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் எனவும், துருப்பிடிக்காத  ஷேவிங் கருவிகள் பயண்படுத்தப்பட வேண்டும் எனவும்,  துணி துண்டுகளுக்குப் பதிலாக உயர்தர காகித துண்டுகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் மற்றும் கிருமி நீக்கமும் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe