தீர்வுகளை நோக்கி காத்திரமாகக் களமாடும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களின் முயற்சியினதும் வேண்டுகோளினதும் பலனாக அரச ஒசுசல மருந்தகங்களை சம்மாந்துறை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் தொடங்குவதற்கான பெறுகை அறிவித்தல் கோரப்பட்டுள்ளது.
பொத்துவில் மக்களின் சுகாதார மருந்தக தேவைகளைப் பூர்த்தி செய்ய அரச ஒசுசல கொண்டுவரப்பட வேண்டுமென்பது நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது.
முன்பிருந்த அரசியல்வாதிகளிடம் இதற்கான தொடர்ச்சியான வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அது நிறைவேற்றப்படாத ஒன்றாகவே நீண்டது.
அரச ஒசுசல மருந்தக சேவைகளைப் பெற்றுக் கொள்ள 100 கிலோமீற்றர் மொத்தப் பயணம் செய்ய வேண்டிய நிலை பொத்துவில் மக்களுக்கு இருந்தது.
தீர்வே விடிவு என்பதற்கமைய மக்களின் நீண்டநாள் தேவையை உரிய இடங்களில் முன்வைத்து, மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க ஆவண செய்துவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களுக்கு மக்கள் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
ஊடகப் பிரிவு.