Ads Area

சவுதி அரேபியாவில் ஒரு வாரத்தில் 15,069 சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் கைது.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகள் போன்றவற்றை மீறிய சுமார் 13,620 பேர் சவுதியின் பல்வேறு பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 20 முதல் 26 வரையிலான காலகட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் பல்வேறு பிரிவுகள் மற்றும் கடவுச்சீட்டுகளுக்கான பொது இயக்குநரகம் (ஜவாசாத்) நடத்திய அதிரடி சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 6,700 குடியுரிமை சட்டங்களை மீறுபவர்கள் எனவும், 5,177 எல்லை பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் எனவும் மற்றும் 1,743 க்கும் மேற்பட்ட தொழிலாளர் சட்டத்தை மீறுபவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சவுதியின் எல்லையை கடக்க முயன்ற 274 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 55 சதவீதம் பேர் எமன் நாட்டவர்கள், 42 சதவீதம் பேர் எத்தியோப்பியர்கள், 3 சதவீதம் பேர் ஏனைய நாடுகளைச்  சேர்ந்தவர்கள் எனவும் மேலும் 139 பேர் எல்லை தாண்டி சவுதியினை விட்டு தப்பி ஓட முயன்றதற்காக கைது செய்யப்பட்டனர். 

இவர்களோடு சேர்த்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்களம் கொடுத்து அவர்களை வாகனங்களில் ஏற்றிச் சென்ற 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

86,019 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் 10,485 பெண்கள் உட்பட 96,504 க்கும் அதிகமான சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டோர் தற்போது தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், அதே சமயம் 84,966 பேரை நாடுகடத்துவதற்கான வேலைகள் அந்தந்த நாட்டு துாதரகங்கள் ஊடாக செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சவுதி அரேபிய எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி யாரேனும் ஒருவர் சவுதிக்குல் நுழைவதற்கு உதவி  செய்தாலோ, அவருக்கு போக்குவரத்து அல்லது தங்குமிடம் அல்லது ஏதேனும் உதவி அல்லது சேவையை செய்து கொடுத்தாலோ அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. 

மேலும் SR1 மில்லியன் வரை அபராதம், மற்றும் உள்ளூர் ஊடகங்களில் அவர்களின் பெயர்களை விளம்பரப்படுத்துவதுடன், போக்குவரத்து சாதனங்கள் மற்றும் தங்குமிடத்திற்காக பயன்படுத்தப்படும் குடியிருப்பு ஆகியவையும் பறிமுதல் செய்யப்படும் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம் - https://saudigazette.com.sa




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe