Ads Area

சவுதி அரேபியாவில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 22ம் திகதி பொது விடுமுறை நாள் என அறிவிப்பு.

சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 22ம் திகதி அரச மற்றுமு் தனியார் துறைக்கு பொது விடுமுறை நாள் என அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு  பிப்ரவரி 22, பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைவருக்கும் அதிகாரப்பூர்வ விடுமுறையாக இருக்கும் என அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 22 ஆம் தேதி சவுதி அரேபியாவின் ஸ்தாபக நாளாகக் (Founding Day) கொண்டாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய மன்னர் முஹம்மது பின் சவூத்  முதல் சவுதி அரசை நிறுவியதைக் குறிக்கும் வகையில் இந் நாள் ஸ்தாபக நாளாக கொண்டாடப்படவுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe