தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களினால் 1.2 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ உபகரணங்களை ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் 20 ஜனவரி 2022 அன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஆதரவுடன் இலங்கைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த உபகரணங்கள் சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்களின் நன்கொடைகளாகும், சுமார் 1.2 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான Mini Oxygen Concentrators இன் ஒன்பது அலகுகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உதவுவதற்காக சவுதியில் உள்ள இலங்கை சமூகம் மற்றும் ரியாத்தில் உள்ள இலங்கை கலாசார மன்றம் ஆகியவை செய்யும் உன்னத பங்களிப்பாக பார்க்கப்படுகிறது.