தகவல் - சம்மாந்துறை அன்சார.
அபுதாபில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் Big Ticket குலுக்களில் Dh25 மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகையை இந்தியாவின் கேரள மாநிலயத்தைச் சேர்ந்த ஹரிதாசன் மூத்தட்டில் வசுன்னி (Haridasan Moothattil Vasunni) என்பவர் வென்றுள்ளார்.
கடந்த பத்து வருடங்களாக அபுதாபியில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாரதியாக (driver) பணிபுரிந்து வரும் ஹரிதாசன் 25 மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகையினையும் 10 நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த 25 மில்லியன் திர்ஹம் இந்திய மதிப்பில் 500 மில்லியனுக்கு சமமானதாகும்.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com