ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருபவர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 33 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்கு அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. சில நாடுகள் உருமாறிய கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பூஸ்டர் தடுப்பூசிகளையும் அறிமுகம் செய்துள்ளன.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருபவர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். அதுமட்டும் இல்லாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களாக கருத்தப்படுவர். அவர்களுக்கு மட்டுமே நாட்டுக்குள் வருவதற்கு அனுமதி உண்டு என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.