Ads Area

சாய்ந்தமருது விளாஸ்டரின் ஏ.ஜி.எம். : சாதனையாளர்களை கௌரவித்தார் அதாஉல்லா எம்.பி, விளையாட்டு உபகரணங்களும் கையளிப்பு !

 நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழக வருடாந்த பொதுக்கூட்டமும், விளையாட்டு வீரர்கள், பல்துறை சாதனையாளர்கள், சமூகசேவகர்கள், கல்விமான்கள் கௌரவிப்பு நிகழ்வும் பிளாஸ்டர் விளையாட்டுக் கழக நிர்வாகத்தலைவர் ஆர்.எம். இம்தாத்தின் தலைமையில் வருட இறுதிநாளான 31 அன்று சாய்ந்தமருது கமு/ கமு/ அல்- ஜலால் வித்தியாலய மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

பிரமாண்ட இசைநிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிளாஸ்டர் விளையாட்டுக்கழக நிர்வாகிகள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டிருந்ததுடன் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன், சாய்ந்தமருது கமு/ கமு/ அல்- ஜலால் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். ஸைபுதீன், பிரதியதிபர் ரீ .கே.எம். சிராஜ், சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் எம்.எம். உதுமா லெப்பை, டௌன் ரவல்ஸ் முதல்வர் ஏ.எல். ஜலீல், இஃறா நிறுவன அதிபர் யூ.எல். சத்தார், அல்- அமானா நற்பணி மன்ற தலைவர் ஏ.எல்.எம். பரீட், தொழிலதிபர்களான ஐ.எல். ரிஸ்வான், எம்.என்.எம். றிம்ஸான் உட்பட கழக நிர்வாகிகள், வீரர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புதிய ஆண்டுக்கான நிர்வாக சபையினர் அறிவிக்கப்பட்டதுடன் ரீ20, ஒருநாள் மற்றும் மென்பந்து, கிங் கோர்சஸ் அணிகளுக்கான தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் கடந்த வருடம் சிறந்தமுறையில் நிர்வாகத்தை மேற்கொண்ட நிர்வாகிகள், திறமையை வெளிக்காட்டிய வீரர்கள் எனப்பலரும் அதிதிகளினால் பதக்கம் அணிவித்து விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சாய்ந்தமருது, காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள விளையாட்டு கழகங்கள் சிலவற்றுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe