நூருல் ஹுதா உமர்
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் காரியாலயத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்றவர்கள் மற்றும் பதவியுயர்வு பெற்றவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சம்மாந்துறை வேலைத்தள காரியாலயத்தில் இஸட்.ஏ. முஹம்மட் அஸ்மீரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண காரியாலயத்தின் மேலதிக பணிப்பாளராக அண்மையில் நியமனம் பெற்ற பொறியியலாளர் எம்.பி.எம். அலியார், கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளராக இருந்து அக்கரைப்பற்று காரியாலய பிரதம பொறியலாளராக பதவியுயர்வு பெற்ற பொறியியலாளார் ரீ. சிவசுப்ரமணியம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண காரியால நிர்வாக உத்தியோகத்தராக இருந்து ஓவுபெற்ற டவ்லியு அசோகா மல்காந்தி போன்றோர்கள் இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிராந்திய காரியாலய உத்தியோகத்தர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு கௌரவிப்பு நிகழ்வை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.