Ads Area

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பதவி தொடர்பிலான வதந்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் பரவி வரும் செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாகவும் இன்றும் பரவி வரும் செய்திகள் பொய்யானவை என்று கூறியுள்ளது.

பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் வெளியிடப்பட்ட செய்திகளை வன்மையாகக் கண்டிப்பதாக அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Newswire.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe