உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தின் காரணமாக இலங்கை சந்தையில் ஒரு மாதத்தில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, இலங்கை சந்தையில் ஒரு கரட் தங்கத்தின் விலை 1 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாவாக காணப்படுவதுடன் 24 கரட் தங்கத்தின் விலை 1 இலட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாவாவுக்கு விற்பனை செய்ப்படுகின்றது.
எதிர்காலத்தில் உலக சந்தையில் தங்கத்தின் பெறுமதி அதிகரிக்குமாக இருந்தால், இலங்கையில் மேலும் தங்க விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் சென்னை, பெங்களுரூ, மும்பை, டெல்லி என இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களில் நிலவும் தங்க விலை நிலவரங்களை கீழ்க் காணும் படங்களில் அறிந்து கொள்ளலாம்.
இதே வேளை அரபு நாடுகளில் தங்கத்தின் விலை விபரம் தொடர்பில் கீழ் காணும் படங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்....இவை இன்றைய (2022-01-03) விலை விபரமாகும்.