தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் உள்ள உணவகம் ஒன்றும் அதனோடு இணைந்த பேக்கரி ஒன்றும் மனிதாபிமான நடவடிக்கையாக சாண்ட்விச்கள் மற்றும் ரொட்டிகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்து வழங்கி வருகிறது.
பணம் செலுத்தி உணவு வாங்கிக் கொள்ள முடியாத கஷ்டநிலையில் இருப்போர் இந்த உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்குச் சென்று இலவசமாக தங்களுக்கான உணவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த உணவகத்தில் பணிபுரியும் அபு அகமது என்பவர் கூறுகையில்: “எங்களின் மகிழ்ச்சி பணம் செலுத்த முடியாதவர்களுக்கு சேவை செய்வதில்தான் உள்ளது. நாங்கள் இலவச சாண்ட்விச்களை வழங்குகிறோம், அதற்கு பதிலாக நாங்கள் இறைவன் பக்கமிருந்து நன்மைகளையே பெற்றுக் கொள்ள விரும்புகிறோம் எனக் கூறியுள்ளார்.
குவைத்தின் பல்வேறு பகுதிகளான ஹவாலி, ஃபர்வானியா, கைதான் மற்றும் பிற பகுதிகளில் இந்த இலவச உணவு வழங்கப்படுகிறது.
அபு அகமது மேலும் கூறுகையில், “உணவு வாங்க முடியாதவர்கள் உணவகத்திற்கு வந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கலாம், அவர் ஒரு கட்டண வாடிக்கையாளரைப் போல அவர்களின் கோரிக்கையை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம், நாங்கள் அவர்களின் ஆர்டரை விரைவாக தயாரித்து அவர்களுக்கு வழங்குகிறோம். யாரும் பட்டினி கிடந்து துாக்கச் செல்லத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.