கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் பிரதீப் ஜயவர்தன மீது சபையின் மற்றுமொரு உறுப்பினரால் மிளகாய்ப் பொடியால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் பேரனான ஜெயவர்தன நேற்று தம்மீது மிளகாய்த்தூள் கலந்த தண்ணீரை வீசியதாக பெண் சபை உறுப்பினர் ஒருவர் மீது குற்றம் சுமத்தியுள்ளதாக மௌபிம தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நிலைக்குழுவின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் மற்றுமொரு கவுன்சிலரை தோற்கடித்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக ஜெயவர்தன தெரிவித்தார்.
"நான் நான்கு வாக்குகளைப் பெற்றேன், என் எதிர் நபருக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது. பின்னர் தேர்தல் முடிவு வெளியானவுடன் சிஎம்சி உறுப்பினர் என் மீது மிளகாய்ப் பொடி கலந்த தண்ணீரை சரமாரியாக வீசினார்,'' என்றார்.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயவர்தன கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk