(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)
மருதமுனை அல் - மதீனா வித்தியாலைய வளாகத்தை ஒளியூட்டும் முகமாக பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளிற்கு இணங்க கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஹாரிஸ் அவர்களால் ஒரு தொகுதி மின்குமிழ்கள் மற்றும் உபகரணங்கள் பாடசாலை அதிபர் ஏ.குனுக்கத்துல்லாஹ் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.எம்.முபீன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் மற்றும் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.