Ads Area

அமீரகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அபுதாபிக்குள் நுழைய பூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை… அதிகாரிகள் விளக்கம்…!!

அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபி வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பூஸ்டர் டோஸ் அவசியம் என்று அறிவித்திருந்த நிலையில் அபுதாபி வரும் நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை என தெரிய வந்துள்ளது. அபுதாபிக்கு வருகை தரும் விசிட்டர்கள் அபுதாபிக்குள் நுழைய கோவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் தேவையில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DCT – அபுதாபி) கூறுகையில், “எந்தவொரு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் அபுதாபிக்குள் நுழைய ஒரு பூஸ்டர் (மூன்றாவது) டோஸ் அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி அபுதாபியில் நுழைவதற்கு 14 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட PCR சோதனை அல்லது 96 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட சோதனையுடன் AlHosn செயலியில் கிரீன் பாஸ் வைத்திருக்க வேண்டும். குடியிருப்பாளர்கள் இந்த அப்ளிகேஷனில் கிரீன் பாஸைப் பராமரிக்க ஒரு பூஸ்டரை எடுக்க வேண்டும் அல்லது அபுதாபிக்குள் நுழைய 96 மணிநேர PCR சோதனை முடிவைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களின்படி, தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் தங்கள் முழு தடுப்பூசி நிலைக்கான ஆதாரத்தை மொபைல் அப்ளிகேஷன் அல்லது சான்றிதழ் மூலம் தங்கள் சொந்த நாட்டின் அதிகாரப்பூர்வ தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் கடந்த 14 நாட்களுக்குள் பெறப்பட்ட PCR சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அபுதாபி எல்லையில் சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாதை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. துபாய்-அபுதாபி சாலை நுழைவுப் பாதை வழியாக எமிரேட்டுக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளுக்காக, DCT-அபுதாபி, வலதுபுறம் உள்ள பாதையை (லேன் 1) பிரத்யேக சுற்றுலாப் பாதையாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அபுதாபிக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடும்போது, ​​அனைத்து சுற்றுலாப் பயணிகளும் சமீபத்திய பயண வழிகாட்டுதல்கள் மற்றும் தேவையான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு DCT – அபுதாபியின் வலைத்தளமான VisitAbuDhabi.ae ஐப் பார்வையிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe