Ads Area

சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16 வது ஞாபகார்த்த தின நிகழ்வும் அமைதி போராட்டமும் மட்டக்களப்பில் !

 நூருல் ஹுதா உமர்

கடந்த 2006 ஆம் ஆண்டு திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16 ஆவது ஞாபகார்த்த தின நிகழ்வும், ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு நீதிகோரிய அமைதிவழி போராட்டமும் இன்று திங்கட்கிழமை (24) காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைந்துள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியின் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக கோஷமெழுப்பியதுடன் பதாதைகளை ஏந்தி அமைதிவழி போராட்டம் நடத்தினர்.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடக்கு , கிழக்கு மற்றும் தெற்கு ஊடக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த ஞாபகார்த்த நிகழ்விற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஊடகவியலாளர் பா.அரியநேத்திரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர், பிரதேச சபை தவிசாளர், பிரதி தவிசாளர், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe