மாளிகைக்காடு நிருபர்
கல்முனை கல்விவலய, சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம் பாடசாலை அதிபர் யூ.எல்.எம். நஸார் தலைமையில் பாடசாலை ஆராதணை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில், 2022ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதனடிப்படையில், பதவி வழி தலைவராக பாடசாலை அதிபர் யூ.எல்.எம்.நஸார், உப தலைவராக அப்பாடசாலையின் (முன்னாள்) ஓய்வுநிலை அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட், செயலாளராக கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் எம்.ஐ.சர்ஜூன், உதவிச் செயலாளராக இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத், பொருளாளராக தென் கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் ஏ.சீ.எம்.றியாஸ், உதவி பொருளாளராக எஸ்.எச்.பதீன் அல் இலாஹி மற்றும் ஆலோசகராக வைத்தியர். எம்.ஏ.எம்.முனீர் ஆகியோர் தெரிவானர்.
பழைய மாணவர் சங்க செயற்பாடுகளை விஸ்தரித்தல், பாடசாலை பௌதீகவள அபிவிருத்தி, கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்தல், பாடசாலை மாணவர்களின் புறக்கிருத்திய நடவடிக்கைகளை விருத்தி செய்தல் மற்றும் பலதரப்பட்ட விடயங்களில் பழைய மாணவர்களின் பங்களிப்பை வழங்குதல் தொடர்பில் எதிர்காலத்தில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டு அவற்றை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கான முன்மொழிகளும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.