கமு/சது/ அல் முனீர் வித்தியாலயத்தில் 2022 ம் ஆண்டுக்கான மாணவத் தலைவர்கள், வகுப்புத் தலைவர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வு அதிபர் A. அப்துல் ஜப்பார் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக சம்மாந்துறை கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர்
A. நஸீர் அவர்களும், கெளரவ அதிதியாக சம்மாந்துறை கோட்டக் கல்வி பணிப்பாளர் M.A சபூர்தம்பி அவர்களும், மேலும் அம்பாரை மாவட்ட தொழில் திணைக்கள ஆணையாளரும் சட்டத்தரணியுமான M.S.M. அன்சார் அவர்களும், பிரதி அதிபர் A.முகம்மட் றிஸ்வான் அவர்களும்,. பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.