Ads Area

பொத்துவிலுக்கு ஒசுசல கேட்டால் சம்மாந்துறைக்கும் கிடைக்குமா..?

இன்று பா.உறுப்பினர் முஷர்ரபின் முகநூலில், தனது முயற்சியின் பலனாக சம்மாந்துறை மற்றும் பொத்துவிலில் அரச ஒசுசல அமையப்பெற உள்ளதான செய்தியை அவதானிக்க முடிந்தது. அவரது ஆதரவாளர்களும் பெருமையாக பகிர்ந்துமிருந்தனர். நடந்தால் மகிழ்ச்சி தான். பெரும் விலை கொடுத்து, இவ்வரசை ஆதரிக்கும் எமது ஏழு பா.உறுப்பினர்களும் இவைகளையாவது செய்து கொள்ளட்டும்.

பா.உ முஷர்ரப் பொத்துவிலில் ஒசுசல ஒன்றை அமைக்கும் கோரிக்கையை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். அதனை பிரதமர் அலுவலகம் குறித்த அமைச்சருக்கு அனுப்பியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பா.உ முஷர்ரப், தனது முக நூலில், ஒரு சான்று கடிதத்தையும் இணைத்துள்ளார் ( இங்கு கடிதம் இணைக்கப்பட்டுள்ளது ). அக் கடிதத்தில் பொத்துவிலுக்கு ஒசுசல கோரப்பட்டுள்ளதே தவிர, அதில் எங்குமே சம்மாந்துறை எனும் வார்த்தை இல்லை. இருந்தால் தேடி கண்டு பிடித்து எனக்கு சொல்லுங்கள். இது தொடர்பில் சம்மாந்துறைக்கென பா.உறுப்பினர் முஷர்ரப் தனியான கோரிக்கை விடுத்திருந்தால், அதனை அவர் வெளிப்படுத்த வேண்டும். பொத்துவிலுக்கான கடிதத்தை வெளிப்படுத்தியவரால், சம்மாந்துறைக்கான கடிதத்தையும் வெளிப்படுத்த முடியும் தானே! பொத்துவிலுக்கு கடிதம் தேவையென்றால், சம்மாந்துறைக்கும் கடிதம் தேவை தானே!

இலங்கையில் மொத்தம் 80 ஒசுசலகளை அமைக்கும் விலை மனு கோரப்பட்டுள்ளது. இதிலேயே பொத்துவில், சம்மாந்துறை ஆகிய ஊர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தற்போது அம்பாறை மாவட்ட எமது முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் நிந்தவூர், அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் ஒசுசல காணப்படுகின்றன. அமைவிட ரீதியில் நோக்கினால் சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய இரு ஊர்களும் ஒசுசல தேவையான ஊர்களாகும். அமைவிடத்தை கொண்டும் இவ்விடங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம். இவ் ஒசுசலவானது கல்முனை, திருக்கோவில் ஆகிய பிரதேசங்களிலும் அமையவுள்ளன. ஒசுசல தெரிவு செய்யப்பட்டுள்ள இடங்களை நன்கு அவதானிக்கும் ஒருவர், தேவை அடிப்படையின் இடத்தின் அமைவிடத்திற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளதை அறிய முடியும்.

இது அமைவிடத்தை கொண்டல்ல, எனது முயற்சியில் என பா.உ முஷர்ரப் கூறுவாராக இருந்தால், சம்மாந்துறையில் ஒசுசல அமைக்குமாறு கோரிய கடிதத்தை, பொத்துவிலுக்கு கோரியதை வெளிப்படுத்தியது போன்று வெளிப்படுத்த வேண்டும். அல்லாது போனால், சம்மாந்துறை தேவை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஊராகவே நோக்க முடியும். அல்லது, பொத்துவிலுக்கு கோரினால் சம்மாந்துறைக்கும் கிடைக்கும் எனும் தர்க்கத்தை ஏதோ ஒரு வகையில் நிறுவ வேண்டும்.

பொத்துவிலுக்கு கோரியதை வெளிப்படுத்தியவர், சம்மாந்துறைக்கு கோரியதை வெளிப்படுத்த தயங்கமாட்டார். அப்படி எந்த ஆவணமும் அவரிடம் இல்லை என்பதே அதன் வெளிப்பாடு. பா.உ முஷர்ரப் சம்மாந்துறைக்கு ஒசுசல வழங்கப்பட்டதை, தனது அரசியலுக்கு சாதகமாக்க முயல்கிறார். இதுவே அவருடைய " தீர்வே விடிவு " அரசியலின் அசிலாகும். சாதித்துவிட்டு சமூகத்தினுள் தைரியமாக நுழையுங்கள். தனக்கு சம்பந்தமற்ற ஒன்றை சாதித்ததாக கூறுவதைப் போன்ற கேவலம் வேறு எதுவுமல்ல.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe