Ads Area

குர்ஆன் மதரஸாவில் மாணவனுக்கு மிருகத்தனமாக தாக்கிய மௌலவி..!!!

சாய்ந்தமருதில் குர்ஆன் மதரஸாவில் மாணவனுக்கு மிருகத்தனமாக தாக்கிய மௌலவி..!!!

சாய்ந்தமருதில் குர்ஆன் மதரஸா நடத்தும் மௌலவி ஒருவர் இன்று அவரது மதரசாவில் குர்ஆன் ஓதும் மாணவர் ஒருவருக்கு மிருகத்தனமாக தாக்கியுள்ளதாக மாணவனின் தந்தை தனது முகநுாலில் புகைப்படங்களோடு பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த சிறுவன் தற்போது கல்முனை AMH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இன்றைக்கு மட்டும் நடந்த சம்பவம் அல்ல, இது போன்று பல சிறுவர், சிறுமிகளுக்கு குறித்த மௌலவி  மிருகத்தனமாக தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவரின் நடவடிக்கை  பற்றி பலரும் போலீசில் பல முறை முறைப்பாடு செய்தும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என பெற்றோர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இவருக்கு எதிராக சம்மந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கை எடுக்கும் படி பெற்றோர் தெரிவிக்கின்றனர்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe