சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 51 கிராம சேவையாளர் பிரிவுகளில் மாணவர்களின்மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு உதவுதலை நோக்காக கொண்டு மாணவர்களுக்கு 22 சமூக சேவைஅமைப்புக்களினால் கற்றல் உபகரணங்கள்,புத்தக பை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (04) சம்மாந்துறைபிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தாய்,தந்தைகளை இழந்த,சமூர்த்தி பெறுகின்ற தெரிவு செய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு முதற்கட்டமாக இக்கற்றல் உபகரணங்கள்,புத்தக பை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்,உதவி பிரதேச செயலாளர் யு.எம்அஸ்லம் , கணக்காளர் ஐ.எம் பாரீஸ், சமூகசேவை உத்தியோகத்தர் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மேலும் இதற்காக உதவிய 22 சமூக சேவை அமைப்புக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது .