தகவல் - சம்மாந்துறை அன்சார்.
விவாகரத்து பெற்ற மனைவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக வளைகுடா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அமீரக கிழக்கு பிராந்திய நீதிமன்றம் ஒரு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. அந்த நபர் தனது மகளைப் பார்க்கவும், தனது முன்னாள் மனைவியுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் இந்த செயலைச் செய்துள்ளார் எனவும் விசாரனையில் தெரியவந்துள்ளது.
தான் விவாகரத்து செய்த தனது முன்னாள் கணவர் தனது அனுமதியின்றி தனது வீட்டிற்குள் நுழைந்து தன்னோடும், தனது குடும்பத்தோடும் சமரசம் செய்ய முனைந்ததாகவும் அவரது மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் விவாகரத்து தீர்ப்புக்குப் பிறகு தனது மனைவி அவரது தொலைபேசி எண்களை மாற்றியதால், மனைவியை தொடர்பு கொள்ளவோ, தனது மகளைப் பற்றி அறிந்து கொள்ளவோ முடியாமல் இருந்ததாகவும், தனது மனைவி மகளை என்னிடமிருந்து பிரித்து, மறைத்து வைத்தாகவும், மகளைப் பற்றிய எந்தவித தகவல்களை என்னிடம் தெரிவிக்காமல் இருந்தாகவும் இதனால்தான் தான் வீட்டை உடைத்து உள் நுழைந்ததாகவும் கணவர் தெரிவித்துள்ளார்.