தகவல் - சம்மாந்துறை அன்சார்.
துபாயில் தொழிலதிபர் ஒருவரைக் அவரது வீட்டில் வைத்து கடத்தி அவரிடமிருந்து தங்களது வங்கிக் கணக்கிற்கு Dh2.5 million மாற்றச் சொல்லி துன்புறுத்திய குற்றச்சாட்டில் 5 ஆசிய நாட்டவர்களுக்கு துபாய் நீதிமன்றம் 3 வருட சிறைத் தண்டனையும், Dh2.5 million திர்ஹம் அபராதமும் விதித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2021 நவம்பர் மாதம் துபாய் அல்-பராரி (Al Barari) பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் தனது வீட்டுக்கு முன்னாள் அவரது காரை பார்க்கிங் (parking) செய்து கொண்டிருக்கும் போது 5 ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அவரைப் பின் தொடர்ந்து அவரது முதுகுப் பின் துப்பாக்கியை வைத்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதோடு அவரது முகத்தை பிளாஸ்டிக் பை ஒன்றினால் இறுகச் சுற்றி அவரை அவ்விடத்திலிருந்து வாகனம் ஒன்றில் ஆள் நடமாற்றம் இல்லாத இடம் ஒன்றிக்கு கடத்திச் சென்று சித்திரவதை செய்து அவரிடமிருந்து தங்களது வங்கிக் கணக்கிற்கு 2.5 million மில்லியன் பணத்தை மாற்றச் செய்ய வற்புறுத்தியுள்ளனர்.
பல மணி நேர தொடர்ச்சியான தாக்குதலுக்குப் பின் தொழிலதிபர் தனது மனைவியை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றச் சொல்லியுள்ளார். அதன் பின்னர் கடத்தல்காரர்கள் தொழிலதிபரை வாகனம் ஒன்றில் ஏற்றி அவரை அவரது வீட்டுக்கு முன் துாக்கி வீசி, இது குறித்து போலிஸில் தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டியும் உள்ளனர்.
இது குறித்து துபாய் போலிசுக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து போலிஸார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டை நடாத்தியதில் அவர்கள் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டதில் தற்போது குறித்த 5 பேருக்கும் 3 வருட சிறைத் தண்டனையும், 2.5 million திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதோடு, தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தப்படவும் உள்ளனர்.