சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு 50 சதவீத ஒட்டகங்கள் இறப்பதாக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் கடற்கரையில் இறந்து கிடக்கும் ஆமைகளில் 86 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டதன் காரணமாக இறந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு முறை மாத்திரம் பயண்படுத்தும் பிளாஸ்டிக்களின் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கியல் எதிர் வரும் ஜூலை 1, 2022 முதல், எமிரேட் முழுவதிலும் உள்ள கடைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளின் விலை 25 ஃபில்ஸ் ஆகும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளதோடு. இந்த கட்டணமானது உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் இ-காமர்ஸ் டெலிவரிகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பைகளுக்கு முற்று முழுதான தடையானதுது இன்றும் இரண்டு ஆண்டுகளில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.