Ads Area

அமீரகத்தில் சாலைகளைக் கடக்கும் பாதசாரிகளுக்கு வழிவிடாது விட்டால் 500 திர்ஹம் அபராதம்.

சம்மாந்துறை அன்சார்.

பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்கும் புதிய பிரச்சாரததினையும் மற்றும் ரன்-ஓவர் விபத்துகளைக் குறைக்க சாலைகளைக் கடக்கும்போது பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அறிவுறுத்தல்களையும் துபாய் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து சிக்னல்களுக்கு கட்டுப்பட வேண்டும் மற்றும் பொருத்தமான வேகத்தில் வாகனங்களை ஓட்ட வேண்டும், பாதசாரிக்கடவைகளில் வாகனத்தின் வேகத்தினைக் குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இச்சட்டங்களை மதிக்காது பாதசாரிகளுக்கு வழி கொடுக்காமல் இருப்போருககு 500 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்படுவதோடு ஆறு கருப்பு புள்ளிகளும் விதிக்கப்படும் எனவும் அமீரக போக்குவரத்துச் துறை எச்சரித்துள்ளது.

அதே போல் பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்கு அதற்கான பொருத்தமான இடங்களை பயண்படுத்தும்படி வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர் இதனை மீறும் பொதுமக்களுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அமீரக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe