அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பங்குகொள்ளும் வீர, வீராங்கனைகளுக்கு விளையாட்டு பாதணி (Shoe) வழங்கும் நிகழ்வு தவிசாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் போட்டிகளில் பங்குபற்றும் உத்தியோகத்தர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், கே.குலமணி, சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், நிதி உதவியாளர் வை.வீ.கதீசா உம்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.