Ads Area

படத்தில் இருப்போர் குறித்து தகவல் வழங்குவோருக்கு 1 மில்லியன் ரூபாய் சன்மானம் - இலங்கைப் பொலிஸ் அறிவிப்பு.


அண்மையில் பாணந்துறை கேதுமதி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு சன்மானமாக 1 மில்லியன் ரூபா வழங்கப்படும் என இலங்கை பொலிஸ்தெரிவித்துள்ளது. 

ஜனவரி 27 அன்று கேதுமதி மருத்துவமனைக்கு முன்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் அம்புலன்ஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடி இருவரின் விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் 24 வயதான கந்தனாராச்சிகே பிரமோத் சண்டகெலும் எனும் 'சிம் மல்லி' எனவும் அவர் இலக்கம் 198, கெமுனு மாவத்தை, வாலான, பாணந்துறையில் வசித்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மற்றைய சந்தேக நபர் 23 வயதான பெமினா ஹன்டிகே சமிது சங்கல பீரிஸ் என்பவராவார். இவர் ஹிரண, முதலாம் லேன், இலக்கம் 52/1 இல் வசித்தவராவார்.

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் 0718592686 அல்லது களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் 0718592745 என்ற இலக்கத்தினூடாக தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி மூலம் - https://www.dailymirror.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe