வாகன விபத்தில் காலை இழந்த சந்தரு டில்ஷான் மாணவனுக்கு பிரதமரின் பாரியாரினால் செயற்கை கால் வழங்கிவைப்பு
வாகன விபத்தொன்றில் தனது வலது காலை இழந்த புத்தல கடுகஹகல்கேகம கனிஷ்ட பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்வி பயிலும் சந்தரு டில்ஷான் மாணவனுக்கு பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (31) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து செயற்கை கால் வழங்கிவைக்கப்பட்டது.
செயற்கை காலினை கொள்வனவு செய்வதற்காக தான் பாடசாலை நேரத்தின் பின்னர் மிளகாய் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டதாகவும், கடுகஹகல்கேகம கனிஷ்ட பாடசாலையின் அதிபர் டீ.எம்.எஸ்.எஸ்.திசாநாயக்க அவர்கள் இது குறித்து அறிந்து பிரதமரின் பாரியாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து இன்று தனக்கு செயற்கை கால் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்து சந்தரு டில்ஷான் மாணவன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதன்போது சந்தரு டில்ஷான் மாணவனின் நலன் விசாரித்ததுடன், அவரது எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.