Ads Area

படத்தில் இருப்பவர் விபத்தில் இறந்து விட்டார் - அடையாளம் காண உதவுமாறு துபாய் பொலிஸ் வேண்டுகோள்.

படத்தில் இருக்கும் நபரை அடையாளம் காண துபாய் காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

அல் பர்ஷா (Al Barsha) காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரன் ஓவர் விபத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார் அவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தொடர்பில் எவரும் இதுவரை உரிமை கோரவில்லை எனவும் துபாய் காவல் நிலையம் தெரிவித்துள்ளது. அ

இவர் தொடர்பில் யாராகினும் அறிந்திருப்பின் துபாய் காவல் நிலைய அவசர இலக்கமான (04) 901 க்கு தகவல் தெரிவிக்குமாறு துபாய் காவல் துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதே போல் கடந்த ஜனவரி 27 அன்று, பர் துபாய் (Bur Dubai) காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதியில் எந்தவித ஆள் அடையாள ஆவணங்களும் இல்லாமல் இறந்து கிடந்த மற்றொரு ஆப்பிரிக்க நாட்டவரையும் அடையாளம் காண துபாய் காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதோடு இவரது  மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய அவரது உடல் தடயவியல் மற்றும் குற்றவியல் பொதுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

செய்தி மூலம் - https://www.khaleejtimes.com

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe