Ads Area

மீனின் இனப் பெருக்கத்திற்காக ஐக்கிய அரபு அமீரக சந்தைகளில் இவ்விரண்டு மீன்களும் ஒரு மாத காலத்திற்கு விற்கத் தடை.

இம் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் இரண்டு வகையான மீன்களை சந்தைப்படுத்தவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமீரக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இம் மாதம் (பிப்ரவரி) 01ம் திகதி முதல் 28ம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள சந்தைகள் மற்றும் கடைகளில் oldlined seabream (Rhabdosargus sarba) and king soldier bream (Argyrops spinifer) கோல்ட்லைன் சீப்ரீம் மற்றும் கிங் சிப்பாய் ப்ரீம் ஆகிய இருவகை மீன்களை சந்தைகளில் காண முடியாதிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறிப்பிட்ட வகை மீன்களின் இனப்பெருக்க காலமாகையால் மீன்பிடி மற்றும் வர்த்தகம்  அமைச்சகம் இந் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. இந் நடவடிக்கையானது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பில் மீன் வளங்களின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட இக்கால கட்டத்தில் மீனவர்களின் மீன்பிடி சாதனங்களில் தற்செயலாக இவ்வாறான மீன்கள் சிக்கிக் கொண்டால் சிக்கிய மீன்களை மீன்டும் தண்ணீரில் விடும்படியும் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

செய்தி மூலம் - https://www.khaleejtimes.com

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe