Ads Area

கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையில் பண்டகசாலை நிர்வாகம் தொடர்பான செயலமர்வு.

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பிரிவின் கீழ் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பண்டகசாலை நிர்வாகம் (store management) தொடர்பான ஒருநாள் செயலமர்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளர் உசைனா பாரிஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் எச்.எம்.எம்.றசீட் (SLACS -1) வளவாளராகக் கலந்து கொண்டார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, MOH  மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பிரிவின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe