நூறுல் ஹுதா உமர், சியாத்.எம்.இஸ்மாயில்
எழுத்தாளர் கல்முனை கதீரின் "காக்கை நிறச் சேலை" சிறுகதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா அக்கரைப்பற்று , சம்மாந்துரை ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகரும் கவிஞருமான வைத்தியர் அஸாத்.எம்.ஹனிபா தலைமையில் சாய்ந்தமருது தனியார் வரவேற்பு மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ. ஜவாத், கல்முனை மாநகர உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.நிசார், ஏ.எம்.பைறூஸ் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான எழுத்தாளர் ஏ.எம்.பறக்கத்துல்லா, சட்டத்தரணியும் கவிஞருமான ஏ.எல்.எம்.றிபாஸ், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், வரலாற்றாய்வாளர்கள், கல்விமான்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.