Ads Area

மஜீட் புரத்தை சூழ்ந்துள்ள யானைக்கூட்டம் : வனஜீவராசிகள் திணைக்களத்தின் மீது பொதுமக்கள் விசனம்.

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

அம்பாறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (24) மாலை திடீரென சம்மாந்துறையூடாக  மஜீட் புரம் பகுதிகளை ஊடறுத்து ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 100க்கும் அதிகளவான யானைகளைக்கட்டுப்படுத்தி அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

மாலை முதல் இரவு வரை குறித்த யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை மற்றும் கலவரப்பட்டமை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் போது, குறித்த யானைகளை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக யானைக்கூட்டத்தின் நகர்வுகளை அவதானித்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதனால் யானைக்கூட்டத்தைப் பார்வையிட சம்மாந்துறை, வளத்தாபிட்டி பகுதிகளில் பொதுமக்கள்   குவிந்து நின்று யானைக் கூட்டத்தை அவதானிப்பதைக்காண முடிகிறது. யானைக்கூட்டத்தினைப் பார்வையிட வரும் மக்களால் போக்குவரத்து நெரிசல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

இது தவிர, குறித்த நிலைமைகளை ஆராய்ந்து   வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவும் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

மேலும், இப்பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு  கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன், அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலும், அண்மைக்காலமாக தினந்தோறும் இடம்பெறுவதனால் யானைக்கூட்டத்தைக் கட்டுப்படுத்தி காட்டிற்கு விரட்டுவதற்கு அவ்விடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்களம் வருகை தருவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியிலுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe