தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவிற்கு குடும்ப விசிட் விசாவில் (Family Visit visa) வருகை தருவோர் ஹஜ் கடமையினை நிறைவேற்ற மக்காவுக்கு செல்ல முடியாது என்றும் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஹஜ் விசா பெற்றிருக்க வேண்டும் எனவும் சவுதி அரேபிய உம்ரா ஹஜ் அமைச்சு தெரிவித்துள்ளது.
டுவிட்டர் மூலமாக விடுக்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
ஹஜ் செய்வதற்கான விசா வைத்திருப்பவர் அல்லது சவூதி அரேபியாவில் வழக்கமாக வசிக்கும் குடியிருப்பாளர் ஆகியோரே ஹஜ் கடமையினை நிறைவேற்ற முடியும் என்றும் குடும்ப விசிட் விசாவில் வருவோர் ஹஜ் கடமையினை நிறைவேற்ற முயாது எனவும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
செய்தி மூலம் - https://www.saudi-expatriates.com